states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் முத லீடு பெற்று மோசடி செய்த விவகாரத்தில் திருச்சி எல்பின் நிறு வனத்தின் 257 சொத் துக்கள் முடக்கப்பட்டன. எல்பின் நிறுவனம் மீதான நடவடிக்கை குறித்து திருச்சி பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

2023-ஆம் ஆண்டிற் கான ஆசியாவின் சிறந்த  தடகள வீரராக மதுரை யைச் சேர்ந்த மும்முறைத் தாண்டுதல் வீரர் செல்வா திருமாறன் தேர்வு செய்  யப்பட்டுள்ளார். அண்மையில் செல்வா திருமாறன் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தட கள தொடரின் மும் முறைத் தாண்டுதலில் 16.79 மீ தாண்டி தங்கப் பதக்கத்துடன் தேசிய சாதனை படைத்தார்.

சரத்பவாருக்கு ஆத ரவு தெரிவித்து, கட்சித்  தாவலில் ஈடுபடமாட் டோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் உறுதிப்  பத்திரத்தில் கையெ ழுத்திட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் “ஜெய் ஸ்ரீராம்” கூறச் சொல்லி தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 10  ஆண்டுகள் சிறை தண்  டனை வழங்கப்பட்டுள் ளது.

அண்ணா பல்கலைக் கழக எம்.இ, எம்.டெக்,  எம்.ஆர்க் மற்றும் முனை வர் பட்ட மாணவர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு முதுநிலை பொறியியல் மாண வர்களுக்கான தேர்வு  முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. http://coe1.annauniv.edu என்ற  இணையதளத்தில் மாண வர்கள் தேர்வு முடிவு களை அறிந்துகொள்ள லாம்.

ஜூலை 9 அன்று அதிக ளவில் திருமணங்கள் நடைபெற உள்ளதாலும், வார இறுதி நாட்களாக உள்ளதாலும், ஜூலை 8, 9 தேதிகளில் பொது மக்கள் வசதிக்காக தமிழ்  நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் 300 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரி யல் பூங்காவுக்கு ரூ.5 கோடி நிதி வழங்குவதாக சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

கூட்டாளி செந்தில் குமாரை கொலை செய்த  வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை ஜூலை 19 வரை நீதிமன்ற காவ லில் வைக்க விருதுநகர்  குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி உத்தரவிட்டுள் ளார்.

உலகச் செய்திகள்

சரியான திசைவழியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் செல்ல வேண்டும் என்றும் தங்கள் ஒற்றுமையையும், பரஸ்பர நம்பிக்கையும் தொடர வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கோரிக்கை வைத்துள்ளார். பாதுகாப்பு என்ற பெயரில் போடும் புதிய வகையான பொருளாதாரத் தடைகளைத் தாங்கள் எதிர்க்கிறோம் என்று ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜீ ஜின்பிங் குறிப்பிட்டிருக்கிறார்.

கலவரம் செய்யும் இளைஞர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புவதாக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.  அதிதீவிர வலதுசாரிகளின் வார்த்தைகளை மக்ரோன் பேசத்துவங்கியுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. காவல்துறையின் அத்துமீறல், இனவெறி, வறுமை மற்றும் பொது சேவைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவர் பேசுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் உள்ள ஜெனின் நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வெறித்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு சிகிச்சை அளிப்பதே கடினமான வேலையாக மாறியிருக்கிறது. காயமடைந்தவர்களில் 20 பேர் உயிருக்குப் போராடி வரும் அளவுக்கு மோசமாக இருக்கி றார்கள்.