புதுதில்லி, அக்.31- தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய இணை யமைச்சர் முரளிதரனை திமுக நாடாளு மன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலை மையில் மீனவர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சார்ந்த என்.ஜே. போஸ், பி. சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்ட னர். இந்தச் சந்திப்புக்கு பின்னர் டி.ஆர். பாலு செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது, “தமிழக மீனவர்கள் கைதான விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணையமைச்சர் வி. முரளீ தரனை சந்தித்துப் பேசியுள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை யும் அவரிடம் வழங்கி உள்ளோம். மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி னோம். மீனவர்களை விடுதலை செய் வது, படகுகளை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். மீனவர்களின் கைது நட வடிக்கை தொடராமல் இருக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.