states

குறுவைப் பயிரை காப்பாற்றுங்கள்

சென்னை, ஜூலை 10 - குறுவை பயிரை காப்பாற்ற கர்நாடகத்தி லிருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை திறப்பதற்கு காவிரி மேலாண்மை ஆணை யம் உடன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பா ண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜுன் 12ல் திறக்கப்பட்டது. அணை பாசனத்திற்காக திறக்கப்பட்ட போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. (69.25 டி.எம்.சி). கடந்த ஒரு மாதத்தில் அணையின் நீர்மட்டம் சரிந்து தற்போது 81.32 அடிதான் உள்ளது. கர்நாட கம் ஜுன் மாதம் கொடுக்க வேண்டிய 9.19  டி.எம்.சியில் 2.80 டி.எம்சி. தான் தண்ணீர் வந்துள்ளது. ஜுலை மாதத்தில் 31.24 டி.எம்.சி  தண்ணீர் தர வேண்டும். குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் ஜுன் முதல் செப்டம்பர் வரை கர்நாடகம் வழங்க வேண்டிய 122.57 டி.எம்.சி தண்ணீர் மிக முக்கியமானதாகும். ஆனால், ஜுன் மாதம் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீ ரிலேயே சுமார் 6 டி.எம்.சி பாக்கியுள்ளது.  

மேலும், ஜுலையில் வழங்க வேண்டிய தண்ணீரும் இதுவரை வழங்காமல் உள்ள தால் காவிரி டெல்டா பகுதியில் குறுவை  பயிர்கள் போதிய தண்ணீரின்றி பாதிக்கப் பட்டுள்ளது, கடமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் செல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அர சின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று ஒன்றிய நீர்பாசனத் துறை அமைச்சர், காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளிடம் தமிழகத்திற் குரிய தண்ணீரை உடன் விடுவிக்க வேண்டுமென முறையிட்டுள்ளார்.  இந்த நிலையில் தற்போது கர்நாடகம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. கிருஷ்ண ராஜசாகர்  அணைக்கு வினாடிக்கு   ஆயிரம் கனஅடிக்கு  மேல் நீர் வரத்து வந்துகொண்டுள்ளது. கபினி அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் நிலையில் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா  பகுதியில் குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரி மேலாண்மை ஆணையம் ஜுன், ஜுலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கர்நாட கம் தர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டுமென உத்தரவிட்டு தண்ணீர் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.