states

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றிபெறச்செய்வீர்: சிபிஐ

சென்னை,பிப்.26- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்க ளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அந்த தொகுதி வாக்காளர்களை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டு ள்ளது.இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்திங்களன்று (பிப்,27) நடைபெறவுள்ள தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் அனை வரும் தவறாது வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆத ரித்து திருமகன் ஈவெராவை சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்ததை நன்றியோடு நினைவு கொண்டுள்ளோம். தொகுதி மக்க ளின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுவதில் திருமகன் ஈ.வெ.ரா. முனைப்போடு செயல்பட்டதையும், இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய வயதில் இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதையும் தொகுதி மக்கள் நெஞ்சம் நெகிழ கூறியதை மறக்க இயலாது.  மதவாத அரசியலையும், மனி தர்களை பிளவுபடுத்தும் சாதிய வேறுபாடுகளையும் உறுதிபட எதிர்த்துப் போராடி வரும் மதச் சார்பற்ற கூட்டணி வேட்பாளராக, மக்களின் நன்மதிப்புப் பெற்ற தலை வர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  நிறுத்தப்பட்டுள்ளார். தொகுதி மக்க ளுக்கு மகன் ஆற்றிய பணியினை நிறைவு செய்யும் ஈவிகேஎஸ் இளங்கோவன்,  மாநில உரிமைகளை யும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும்  பாதுகாக்க  முன்வரிசைப் போராளி யாக செயல்படுவர் என்பதை அனை வரும் அறிவர். சுயநல அரசியலை விலக்கி, மக்கள் நலன் பேணும் நேர்மறை அரசியல் பயணம் வலி மையும், பொலிவும் பெற,  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள் “கை” சின்னத்தில் வாக்க ளித்து, ஈவிகேஎஸ் இளங்கோவனை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.