states

தீபாவளி முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை, ஜூலை 11- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.  இந்த ஆண்டு, நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே, ரயில் டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (ஜூலை 12 ) முதல் தொடங்குகிறது. காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.  ஜூலை 12 ஆம் தேதி முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 9 ஆம் தேதி யும், ஜூலை 13 தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10 ஆம் தேதியும், ஜூலை 14 தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11 ஆம் தேதியும், ஜூலை 15 ஆம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12 ஆம் தேதியும் பயணிக்க முடியும்.  இந்த முறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக் கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.

;