சென்னை, ஆக. 31- வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கல்வி, வயது ஆகியவற்றுக்கான விதிகளை தளர்த்தி தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையை தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற் றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் புறச்சிந்தனை உடைய (ஆட்டி சம்) குழந்தைகளின் பெற்றோர்கள் பயன்பெற கல்வி, வயது உள்ளிட்ட விதி களை தளர்வு செய்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் வி.அருண்ராய் 2022 ஆகஸ்ட் 18 தேதி யிட்டு அரசாணை எண்.63 வெளியிட் டுள்ளார்.
தமிழக அரசின் முழுமையான நிதி யின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான வேலைவாய்ப்புகள் உரு வாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும் மாற்றுத்திறனாளிகள், பட்டி யலினத்தவர், பெண்கள், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக 45 வரையும் வயது இருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு கல்வித்தகுதியும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் ஆகியவை தற்போது வரை விதிகளாக உள்ளன. தமிழக தொழில் வர்த்தகத்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் தலைமையில் 31.5.2022 அன்று மாநில மற்றும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதி நிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்சொன்ன விதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது.
அதனடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற அதிகபட்ச வயதாக 45 முதல் 55 வரை என உயர்த்தியும், 8ஆம் வகுப்பு கல்வித்தகுதி இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும் தமிழக அரசு உத்தரவிடுகிறது. தளர்வு செய்யப்பட்டுள்ள இந்த விதிகள், இந்த அரசாணை வெளியிடப்படும் தேதியில் இருந்து அமலுக்கு வரு கிறது என்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் வி.அருண் ராய் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் வாழ் வாதாரத்தை உயர்த்த உதவி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் இந்த புதிய அரசா ணையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் மகிழ்வோடு வரவேற்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.