states

img

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, கடந்த 12-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமியை நியமிக்கப்பட்டார். வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி நீதிபதி எம்.துறைசாமி பணி ஓய்வு பெறும் நிலையில், நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.