states

ஜிப்மரில் இந்தித் திணிப்பு: திரும்பப்பெற சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி,மே.12- ஜிப்மர் இயக்குனரின் இந்தித்  திணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின்  புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- ஒன்றிய பாஜக அரசு  பிற மொழிபேசும் மக்கள் மீது இந்தி மொழியை திணித்து வருகிறது. இந்தி மொழியை பின்பற்றும் எந்த  மாநிலமும் இந்தி பேசாத மாநிலங்களை காட்டிலும்  முன்னேறவில்லை. உண்மை இப்படி இருக்க மத்திய மதவெறி அரசின் செயல்கள்  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற  பாசிச சித்தாந்தத்தை தூக்கிப் பிடிப்பதாக உள்ளது. பொதுத்துறை  நிறுவனங்களை நாசப்படுத்தும் செயல்களை செய்து வருகிறது. குறிப்பாக   ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்பை  சார்ந்தவர்களை உயர் அதிகாரிக ளாக நியமித்து தனது மதவெறி செயல் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்து வருகிறது.  நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய  அரசு செயலர்கள் மூலம் அழுத்தம் கொடுப்பதாக சொல்லி   நடைமுறையில் உள்ள மொழி கொள்கைக்கு முரணாக இந்தித் திணிப்பை நோக்கமாகக் கொண்ட உத்தரவை புதுச்சேரி ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அகர் வால் வெளியிட்டுள்ளார். இது அப்பட்டமான சட்ட மீறல் ஆகும்.  இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு வன்மையாக கண்டி க்கிறது.  இது புதுச்சேரி- இந்திய  அரசு உடன்படிக்கையை மீறுவதாக  உள்ளது. எனவே உடனடியாக சட்ட விரோதமான இந்தி திணிப்பு சுற்றறிக்கையை இயக்குனர் திரும்பப் பெற வேண்டும். புதுவை  மக்களின் நலன்களை பாதுகாக்கும்  வகையில்  ஏழை-எளிய நோயாளிக ளுக்கு தரமான கட்டணமில்லா சிகிச்சை தொடர்ந்து கிடைக்கும் வகையில்  நிர்வாகத்தின் செயல் பாட்டில் இயக்குனர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.