states

img

ஐடிஐ மாணவர்களுக்கு கணினி தேர்வு: ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

 சென்னை, அக்.31- ஐடிஐ மாணவர்களுக்கு கணினி முறை தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (அக்.31) சென்னையில் ஆசிரி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் 91 ஐடிஐ-கள் செயல்படு கின்றன. இவற்றில் பயிற்சி பெறும் மாண வர்களுக்கு கணிதம் மற்றும் பொறியியல் வரைபட பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த  அடிப்படையான பாடங்களை பிற பாடங்க ளோடு இணைப்பதற்கு ஏதுவாக பயிற்சி நேரத்தை கணிசமாக குறைத்துள்ளனர். மாணவர்களின் திறனை பரிசோதிக்க உத வாத கணினி (சிபிடி) முறையிலான தேர்வை  புகுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து தேசிய திறன் பயிற்சி மைய மண்டல  இயக்குநர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள்  பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு வினாத்தாள் - விடைத்தாள் மூலம் தேர்வு நடத்த வேண்டும், மாணவர்களின் தேசிய திறன் தகுதியை குறைத்ததை திரும்ப பெற வேண்டும், தேசிய தொழிற்துறை சான்றிதழ் (என்டிசி) மற்றும்  அப்பரன்டீஸ் (என்ஏசி) சான்றிதழ் பெற்றவர்  களுக்கு டிப்ளமோ இன் கிராப்ட்ஸ் மேன் (டிரேட்) என சான்று வழங்க வேண்டும், மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பரிந்துரைப்படி, ஐடிஐ படித்து பணியாற்றுவோருக்கு முதல்  வர் பதவி உயர்வு வழங்க வேண்டும், சிஓஇ, பிபிபி, இஎஸ் பாடத்திட்டங்களில் பணியாற்  றும் ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தின்போது செய்தியா ளர்களிடம் பேசிய தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் தலைவர் எம்.சீனிவாசன், “மாணவர்களை கொத்தடி மைகளாக மாற்றும் நோக்கோடு, புதிய கல்விக் கொள்கையை ஐடிஐ-யில் புகுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனை கைவிட்டு, ஐடிஐ பாடத்  திட்டத்தை மேம்படுத்த வேண்டும்” என்றார். போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு.அன்பரசு, சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி ஆகி யோர் பேசினர். அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.ரமேஷ், பொருளாளர் என். திருநாவுக்கரசு, தலைமைநிலைய செயலா ளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.