states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை,செப்.26- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற னர். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச்  சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோ கன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார்,  இவை அனைத்தையும் பணிவின் சிகர மாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல  உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்று வாழ  வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு என்ன? நாளை முடிவு

சென்னை, செப்.26-  அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்து வம் அளிப்பது குறித்து வரும் 28 ஆம்  தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.  சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங் கேற்க உள்ளனர். அதன் பிறகு பல்வேறு  கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து அரசு சார்பில் அறிவிக்கப்படுகிறது.

2 நாட்களுக்கு கனமழை

சென்னை,செப்.26- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  28 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக் கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தரு மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,  புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர்,  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடு துறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்பு ரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்க ளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;