states

அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை நிறைவு

சென்னை,செப்.7- சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை  11 ஆம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் புதனன்று (செப்.7) விசாரணை மேற்கொண்டனர். ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு  கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர்  அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மு கம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை என்று கூறியிருந்தார்.  இந்நிலையில், புதனன்று (செப்.7) காலை  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமை யில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

;