states

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்:

நாகர்கோவில், நவ. 20- தூத்துக்குடியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு முதுநிலை மயக்கவியல் மருத்துவப் படிப்பை, கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோ பர் 6ஆம் தேதி, அந்த மாணவி தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து குலசேகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது விடுதியில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப் பற்றினர். அந்த கடிதத்தில், கல்லூரி பேரா சிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், பயிற்சி மாணவர் ஒருவரும், பயிற்சி மாணவி ஒருவரும் தன்னை மனதளவில் டார்ச்சர் செய்த தாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை யடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பேரா சிரியரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறை யில் அடைத்தனர். அதன் பிறகு வழக்கா னது

நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஆய்வாளர் பார்வதி ஆகியோர் விசார ணையைத் தொடங்கினர். அதனை அடுத்து, நீதிமன்ற காவலில் இருந்த பேரா சிரியரிடம் விசாரணை நடத்திய காவ லர்கள் அவருக்கு ஆண்மை பரிசோ தனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பயிற்சி  மாணவர், பயிற்சி மாணவி இருவரையும் பிடிக்க சி.பி.சி.ஐ.டி  போலீசார் நட வடிக்கை மேற்கொண்டனர். இருவரும் முன்ஜாமீன் பெற்ற நிலையில் விசார ணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. இதனை அடுத்து பயிற்சி மாணவர்கள் இருவரும் நாகர்கோ விலில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவல கத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இரண்டு நாள் விசாரணைக்கு ஆஜ ரான பயிற்சி மாணவரிடம், தற்கொலை செய்து கொண்ட மாணவி எதற்காக உங்க ளது பெயரை கடிதத்தில் எழுதி வைத்துள் ளார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இரு வரும் கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்து, மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராகுமாறு அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.