states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

பெங்களூரு, செப். 23- பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) வீட்டுத் திட்ட  ஒப்பந்தத்தை வழங்குவதற்காக ராமலிங்கம் கட்டுமான நிறு வனத்திடம் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தார். இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு  தசரா விடுமுறைக்கு பின் விசாரணை

ஸ்ரீநகர், செப். 23- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு  370-ஐ ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.உமேஷ் லலித் அறிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான புதிய அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது. இதில், நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எஸ். ரவீந்திர பட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அங்கன்வாடி ஊழியர்கள்  செப்.26 போராட்டம்

சென்னை, செப். 23 - அங்கன்வாடி மையங்களுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு, பில்லில் உள்ளவாறு முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது மையங் களுக்கு வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே வழங்கக் கோரி செப்.26 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், தொடக்கப்பள்ளி மாண வர்களின் காலை உணவு திட்டத்திற்கு சுய உதவிக்குழுக்கள் சமைத்துக் கொடுப்பதை ரத்து செய்துவிட்டு, அங்கன்வாடி  மையத்திலேயே தயா ரித்து வழங்க அனுமதி வழங்க வேண் டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய செல்போன்களை மாற்றி புதிய செல்போன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களும் போராட்டத்தில் வலியுறுத்த உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டெய்சி தெரிவித்துள்ளார்.

மின்ஊழியர்கள் செப்.26 காத்திருப்பு போராட்டம்

சென்னை, செப். 23 - மின் ஊழியர்களின் 23 சலுகை களை பறிக்கும் வாரியத்தின் சுற்றறிக் கையை ரத்து செய்யக் கோரி செப்.26 அன்று தமிழகம் முழுவதும் வட்ட  மேற்பார்வை பொறியாளர் அலுவலகங் கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மின்வாரிய பணியாளர்கள் பெற்று வந்த சலுகைகளை பறிக்கும் வகையில் வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், ரிடிப்ளாயிமெண்ட், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு சென்னை கிளை கள், பொதுக்கட்டுமான வட்டம், அபிவிருத்தி வட்டம் ஆகியவற்றில் பணி புரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

பருவமழை முன்னேற்பாடு:  முதல்வர் ஆலோசனை

சென்னை, செப்.23- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் 2-வது வாரம்  தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதையொட்டி ஒவ்வொரு பகுதியி லும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப்  பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது என்பது பற்றி ஆய்வு செய்ய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26 ஆம்  தேதி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசுத் துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர்  அதிகாரிகள் மற்றும் காவல், தீயணைப்பு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். வட கிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கெஞ்சல்

முஸ்லிம்கள் உள்ளனர், கிஷன்கஞ்சில் மட்டும் 67 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர்.  நான்கு மாவட்டங்கள் 24 சட்டமன்றத் தொகுதிகளையும், நான்கு மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியதாகும். இதில் பாஜக எட்டு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலா ஐந்து இடங்களையும் பெற்றது. ஜேடியு நான்கு இடங்களையும் பெற்றன. 2019- மக்களவைத் தேர்தலில் பாஜக அராரியா-வில்  மட்டுமே வெற்றி பெற்றது. பூர்னியா மற்றும் கதிஹார் ஆகிய இரண்டு இடங்களில் ஜேடியூ வெற்றி பெற்றது மற்றும் கிஷன்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தது.