சென்னை, மார்ச் 31- மேற்கு வங்காள மாநிலத்தில் பல்வேறு தொழில்பிரிவுகளில் முதலீடு செய்ய முன்வருமாறு தமிழகத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஏப்ரல் 21 முதல் 22வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள வணிக சந்திப்பு 2022 என்று நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அம்மாநில தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தலை வர் ராஜிவா சின்ஹா தமிழக தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தெற்காசியாவின் நுழை வாயிலாக விளங்கும் மேற்கு வங்கம் தனித்துவமான வணிக வாய்ப்புகளையும், முதலீட்டாளர் நட்புக் கொள்கைகளுடன் மனித வள மூலதனத்தையும் கொண்டதது என்று அவர் கூறினார்.
சென்னையில் அசோசேம் ஏற்பாடு செய்த அரசு-தொழில் முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்காளத்தின் பொருளாதாரம், தேசிய சராசரியை விட, கோவிட்க்குப் பின் அதிக வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார். உற்பத்தி வசதிகளை அமைப்ப தற்கான எளிதான கொள்கை சூழலை அவர் விரி வாகக் கூறினார். அம்மாநிலத்தில் சேவைத் துறையின் வளர்ச்சியையும் அவர் எடுத்துரைத்தார். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த வணிக சந்திப்பின் போது ரூ.1,23,578 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்று அசோசோம் தெரிவித்துள்ளது. உணவு பதப்படுத்துதல் தொழில்கள் மற்றும் தோட்டக் கலைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஸ்ரீரந்தீர் குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை செயலாளர், மோகன்காந்தி, மேற்கு வங்க அரசின் தொழி லாளர் துறை முதன்மைச் செயலர்பருண் ரே ஆகி யோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.