states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கடலூர் மாவட்டத்தில்  பேருந்து நிறுத்தம்

பாமகவின் என்எல்சி முற்றுகை போராட்டம் வன் முறையில் முடிந்ததை தொடர்ந்து கடலூர் மாவட் டம் முழுவதும் மாலை 6  மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழு மையாக நிறுத்தவேண்டும். பள்ளி - கல்லூரி மாணவ,  மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப் படுத்திய பிறகு சேவையை நிறுத்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தர விட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கனமழை காரணமாக கர்நாடக அணைகள் வேக மாக நிரம்பி வரும் நிலை யில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 12,444 கனஅடியில் இருந்து 15,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.9 அடியில் இருந்து 65.90அடி யாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 28.56 டி.எம்.சி.யாக உள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அண்ணாமலைக்கு கால்தான் வலிக்கும்:  எஸ்.ரகுபதி கருத்து

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் எவ்வித தாக்கத்தை யும் ஏற்படுத்தப் போவ தில்லை. அவரின் கால்கள் தான் வலிக்கும் என தமிழ் நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “அண் ணாமலை ஆளுநரிடம் எத்தனை பட்டியல் வேண்டு மானாலும் கொடுக்கட்டும். திமுகவும், அமைச்சர்களும் இதை எதிர்கொள்ளத் தயா ராகவே உள்ளோம். அண் ணாமலை அரசியல் செய் வதற்காக நடைபயணம் மேற்கொள்கிறார்.  இதனால் எந்த விளை வும் ஏற்படப்போவதில்லை. எந்த விதமான அரசியல் மாற்றமும் ஏற்படாது. அவருக்குத்தான் கால் வலிக்கும். ராகுல் காந்தி நடைபயணத்தில் எழுச்சி இருந்தது. அண்ணாமலை நடைபயணத்தில் எந்த எழுச்சியும் இருக்காது. இவர்களாக மக்களை கூட்டிச் சென்றால்தானே தவிர, மக்கள் இவர்கள் பின்னால் வரத் தயார் இல்லை” என்றார். 

அண்ணாமலையை புறக்கணித்த கூட்டணி தலைவர்கள்

‘என் மண், என் மக்கள்’ என்ற அறிவிப்புடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெள்ளியன்று மாலை இராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை துவக்கினார். இதனை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். இதில்  பாஜக காலில் விழாத குறையாக கெஞ்சி அழைத்தும் அதிமுக, பாமக, தேமுதிக  உள்ளிட்ட பிரதான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்த னர். அந்தக் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரும், பாஜகவின் வாலாக  மாறியிருக்கும் ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்டோர்களே கலந்து கொண்டனர். இவர்கள் தவிர வடமாநிலத்தைச் சேர்ந்த வேதம் ஓதுபவர்கள்  கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.  புதிய தமிழகம், ஜான்பாண்டியன் கட்சியின ரின் கொடிகள் அதிகளவில் காணப்பட்டன. இந்த நடைபயணத்திற்கென சொகுசு பேருந்து ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்று சமூகவலைத்தளங்களில் படம் பகிரப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை : யுனெஸ்கோ

‘கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தவே செய்கிறது. அதேவேளையில் பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதை உலகம் முழுவதும் இருக்கும் அரசுகள் கட்டுப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். பள்ளி யில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் கல்விக்கான தேவையில்லாத விஷயங்களுக்காக, மாணவர்கள் பள்ளிகளில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது நிச்சயம் எதிர்மறையாகவே இருக்கும். அது மட்டுமல்லாமல் கல்வியில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் குரல் ஒலிக்கிறது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்மைபயக்க வேண்டுமே தவிர, தீமை விளைவிக்க விட்டுவிடக் கூடாது’’ யுனெஸ்கோ தனது சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாஜக தலைவரை அலற வைத்த ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர்

தொலைக்காட்சி விவாதத்தின் போது ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் தன்னை “முஜாஹிதீன் (பயங்கரவாதி)” என்று அழைத்ததாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த பிரியங்கா கக்கர், ‘‘ஷெஜாத்’’ என்றால் ‘‘பயங்கர வாதி’’ என அர்த்தம். அதே போல ‘‘முஜாஹிதீன்’’ என்றாலும் “பயங்கரவாதி” என்றுதான்  அர்த்தம். எனவே ‘‘ஷெஹ்சாத் முஜாஹிதீன்’’ என்று சேர்த்து சொன்னாலும் “பயங்கரவாதி”  என்று சொல்ல முடியும். இதில் குற்றம்சாட்ட என்ன உள்ளது’’ என தனது கருத்து கணை களால் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் பாஜக தலைவரை அலறவிட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா கக்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இமேஜ் பற்றியே மோடி அரசு கவலைப்படுகிறது: ஒவைசி

‘மோடி அரசு தனது இமேஜ் பற்றியே அதிகம் கவலைப்படுகிறதே தவிர மணிப்பூ ரில் தவிக்கும் குக்கி பழங்குடி பெண்களின் கண்ணியத்தைப் பற்றி அல்ல’’ என மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி ஒன்றிய பாஜக அரசி விமர்சித்துள்ளார்.'

நாடகத்தை நிறுத்துங்கள்: ஸ்மிருதி இரானிக்கு காங். பதிலடி

‘நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவதால் குற்றங்களுக்கான தண்டனை ஒருபோதும் குறையாது. மணிப்பூர் வன்முறை குறித்து 78 நாட்கள் அமைதியாக இருந்தீர்கள். உங்கள் நாடகம் மற்றும் போலி சீற்றத்தை நிறுத்துங்கள்’’ என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் பதிலடி கொடுத்துள்ளார். “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான  கொடுமைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை” என்று ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை விளக்கம்

மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது தாலியை கழற்ற கூறியதாக பெண் கூறிய புகார் குறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,”நகைகளை மதிப்பிட்டபோது 35 சவரன் இருப்பது கண்டறியப்பட்டு சுங்கவரியாக ரூ.6.5 லட்சம் விதிக்கப்பட்டது. சுங்க வரியை கட்ட மறுத்ததால் அவர்களின் நகைகளை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்தனர். ஜூலை 23 அன்று அப்பயணி மலேசியா திரும்பி சென்றபோது நகை திருப்பி ஒப்படைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டதுதான் உண்மை என விளக்கம் அளித்துள்ளது.

19 பேரின் ஜாமீன் ரத்து 

கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும், கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இருசக்கர வாகனம் திருட்டு : பாஜக பிரமுகர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் இருசக்கர வாகனம் சதுரகிரி கோவிலுக்கு சென்று திரும்பிய பொழுது காணவில்லை. புகாரில் அடிப்படையில் போலீசார் வாகனத்தை தேடி வந்த நிலையில், உசிலம்பட்டி நகர பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் (42) இருசக்கர வாகனத்தை திருடி வாகனத்தின் வண்ணம் மற்றும் நம்பர் பிளேட் ஆகியவற்றை மாற்றி தனது சொந்த வாகனம் போல ஓட்டி வர, போலீசார் ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகு உதயகுமாரின் இருசக்கர வாகனம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் தமிழ்ச்செல்வனை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

காவல்ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட சார்பு ஆய்வாளர்

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஹிதேந்திர நாத் சர்மா (40) காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அதே காவல் நிலையத்தில் பி.ஆர்.சிங் (52) சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி  வருகிறார்.  புதனன்று மாலை மதுபோதையில் வந்த சார்பு ஆய்வாளர் பி.ஆர்.சிங் தனது  துப்பாக்கியால் ஆய்வாளர் ஹிதேந்திர நாத் சர்மா மீது சரமாரியாக சுட்டார். இதில், சர்மாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சக காவல்துறையினர் ஆய்வாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பி.ஆர்.சிங்கை கைது செய்தனர்.

பலத்த அடி வாங்கிய மெட்டாவின் “திரெட்ஸ்” 

டுவிட்டர் எக்ஸ் தளத் திற்கு போட்டியாக முக நூல் தாய் நிறுவனமான மெட் டாவின்  “திரெட்ஸ்” தளத்தில் அறிமுகமான 5 நாள்களில் அதில் 10 கோடி பேர் இணைந் தனர். இது புதிய சாதனை அம்சமாக பார்க்கப்பட நிலை யில், அதன் பயன்பாட்டை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் குறைந்து வரு வதாக தகவல் வெளியா னது. இதனை மெட்டா நிறு வனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது திரெட்ஸில் உள்ள பயனர் களின் எண்ணிக்கை பாதிக் கும் மேல் குறைந்துள்ள தாகவும், திரெட்ஸ் செய லில் மேலும் பல புதிய அம் சங்கள் சேர்த்தால் பய னர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும் என்று எதிர்பார்க் கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

மாணவர்களை  மசாஜ் செய்ய வற்புறுத்திய ஆசிரியர் சஸ்பெண்ட்

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சென்ட்ரிமுண்டா கிரா மத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் ஆசிரியர் மாணவர்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆசிரியருக்கு மசாஜ் செய்ய மறுக்கும் மாணவர்களை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மாண வர்களின் பெற்றோர் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து ஜாஸ்பூர் மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சய் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை: நீதிபதி கோரிக்கை

சென்னை, ஜூலை 28- சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில்  திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழ்நாடு அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், புழல் சிறையில் திடீர்  சோதனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினர் நசிர் அகமது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரி யானா மாநிலங்களில் உள்ளது போல்,  சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழ் நாட்டில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசை நீதிபதி கேட்டுக் கொண்டார். மேலும், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கும் அறை வசதி, மின் விசிறி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல் ஆறு வயது வரையிலான குழந்தை கள் சிறையில் தாயுடன் வசிக்க அனு மதிக்கப்பட்டுள்ளதால், அந்த குழந் தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன், மழலையர் பள்ளி கள் தொடங்க வேண்டும் என இந்த  கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், நீதிமன்றம் ஜாமீன் அளித்து பிணைய தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் இருக் ்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும், சிறை வாசிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

சென்னை,ஜூலை 28- நெல்லை - தாம்பரம் இடையே வருகிற 30 ஆம் தேதி சிறப்பு ரயில்  இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30 ஆம் தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06004) வரும் 30 ஆம்  தேதி மதியம் 3.40 மணிக்கு சென்னையி லிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

தங்கம் விலை குறைந்தது

சென்னை,ஜூலை 28- கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூலை 28) கிராமுக்கு 30 ரூபாய் வரை குறைந்திருந்தது. ஒரு கிராம் ரூ.5,550-க்கும்,சவரன் ரூ.44,400-க்கும் விற்பனையானது. இதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்திருக்கிறது. கிலோ ரூ. 81,500-ல் இருந்து ரூ.79,500 ஆக குறைந்து விற்பனையானது.

உலகச் செய்திகள்

தங்கள் நாட்டில் ஹைட்ரஜன் உற்பத்தியை பெரும் அளவு அதிகரிக்க ஐரோப்பிய நாடான ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இதற்கான புதிய கொள்கையையும் அந்நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டது. எரிசக்தித்துறையில் எழுந்துள்ள புதிய சவால்களை சந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் உள்ள குழப்பமான அரசியல் நிலைமையைச் சரி செய்ய எந்தவிதமான தன்னிச்சையான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அந்நாட்டில் உள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் எச்சரித்திருக்கிறது. அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகளை இறுதி செய்யப்பட்டதையே அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சூடானில் நிலவி வரும் உள்நாட்டுச் சண்டையால் வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எத்தியோப்பியாவிற்குள் இதுவரை நுழைந்த சூடான் மக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தொடுவதாக சர்வதேச புலம்பெயர் கழகம் தெரிவித்திருக்கிறது. இவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளைத் தருவதில் நெருக்கடி எழும் சூழலும் உருவாகியுள்ளது.

 

 

;