states

நல்லாளுமை விருது அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கான நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய யுக்திகள், புதிய முயற்சிகள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாளுமை விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நல்லாளுமை விருது, சென்னை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜனுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அருண் தம்புராஜ் (கடலூர்), பிரபுசங்கர் (கரூர்), கோவை எஸ்.பி. (புறநகர்) பத்ரி நாராயணன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.15 அன்று சுதந்திர தின நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுடன் ரூ.2 லட்சம் வெகுமதி வழங்க உள்ளார்.