states

தேர்தல் பத்திரம் என்பது சட்டப்பூர்வ லஞ்சம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, அக். 3- தேர்தல் பத்திரம் என்பது சட்டப்பூர்வ லஞ்சம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி  இன்று (அக். 4) முதல் விற்பனை செய்ய வுள்ளது. ஒன்றிய பாஜக அரசால் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் என்பது அரசியல் கட்சிக ளுக்கு யார் வழங்கினார்கள் என்று குறிப்பிடா மலேயே நிதியை வாரி வழங்க வழி வகுக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல்  கட்சிகள், கடைசியாக நடந்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதத் திற்கும் குறையாமல் வாக்குகளை பெற்றி ருந்தால் தேர்தல் பத்திர திட்டத்தில் நிதியை  பெற முடியும். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 28ஆவது முறையாக தேர்தல் பத்திரங்களை அக்டோபர் 4 முதல் 13ஆம் தேதி வரை விற்பனை செய்யவுள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை, தில்லி உள்ளிட்ட 15 நகரங்களில் உள்ள அங்கீகரிக் கப்பட்ட கிளைகளில் மட்டுமே தேர்தல் பத்திர விற்பனை நடைபெறும். உள்நாட்டைச் சேர்ந்த தனிநபர், இந்து கூட்டு குடும்பம், நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டோர் வரி விலக்குடன் தேர்தல் பத்திரங்கள் வாங்க தகுதி பெற்றவர்களாவர். ஆயிரம், பத்தாயிரம், 1 லட்சம், 10 லட்சம், 1 கோடி ஆகிய மதிப்புகளில் வெளியிடப்படும் தேர்தல் பத்திரங்களை பணம் செலுத்தி வாங்குவோர் பெயர்களும் வெளியில் தெரி யாது. அந்த தேர்தல் பத்திரங்களை வாங்கு வோர் அவர்கள் விரும்பும் அரசியல் கட்சி களுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்களின் செல்லுபடி கால மான 15 நாட்களுக்குள், அவற்றை வங்கி களில் செலுத்தி அரசியல் கட்சிகள் பணமாக பெற்றுக்கொள்ள முடியும். 15 நாட்களுக்குள் பணமாக மாற்றாத பத்திரங்களின் கூட்டுத் தொகை, வங்கியின் மூலம் பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். இந்த நிலையில், தேர்தல் பத்திரம் என்பது சட்டப்பூர்வ லஞ்சம் என குற்றம்சாட்டி யுள்ள ப.சிதம்பரம், கடந்த காலங்களில் 90 விழுக்காடு நிதி பாஜகவுக்கே சென்றுள் ளதால் தற்போதும் அந்த கட்சிக்கு பொன் அறு வடையாக அமையும் என விமர்சனம் செய்து ள்ளார்.