சிலியில் பொது வாக்கெடுப்பில் மக்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக அனைத்து இடதுசாரி சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன. சட்டத்திற்கு ஆதரவாக செப்டம்பர் 2 ஆம் தேதியன்று சிலி தலைநகர் சாண்டியாகோவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். செப்டம்பர் 4 ஆம் தேதியன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.