states

ஒரே தேதியில் நடத்தப்படும் 2 தேர்வுகளால் பாதிப்பு தேர்வர்கள் நலன் பேசினால் தேர்வர்களை பிரித்து மோத விடுவதா?

ஸ்டாப் செலக்சன் கமிஷனுக்கு சு.வெங்கடேசன் எம். பி.,கேள்வி

மதுரை, ஜூலை 15-  ஒரே தேதியில் நடத்தப்படும் 2  தேர்வுகளால் தேர்வர்கள் பாதிக்கப் படுவார்கள். எனவே தேர்வு தேதி களை மாற்றி அமைக்குமாறு ஸ்டாப்  செலக்சன் கமிஷனுக்கு சு.வெங்க டேசன் எம். பி. கடிதம் மூலம் வலி யுறுத்தினார். ஆனால் அதற்கு ஸ்டாப்  செலக்சன் கமிஷன் அளித்த பதில் பொருத்தமானது அல்ல என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நான் 19.06.2023 அன்று ஸ்டாப் செலக்சன் கமிஷன் தலைவர் கிஷோர் அவர்களுக்கு கடிதம் எழுதி  இருந்தேன். அதில் இரண்டு தேர்வு கள் - ஒன்றிய அரசு ஊழியர் தேர்வா ணையம் (Selection posts, Phase  XI, 2023) மற்றும் தேசிய தேர்வு முக மையின் விஸ்வபாரதி, சாந்தி நிகே தன் தேர்வுகள் 27 & 28 ஜூன் 2023 - அதே தினங்களில் வருவதால் தேர்வர்கள் நலன் கருதி தேதிகளை மாற்றுமாறு எழுதியிருந்தேன்.  அதே போன்ற கோரிக்கையை தேசிய தேர்வு முகமையிடமும் வைத்  திருந்தேன். ஒன்றிய பொதுப் பணி யாளர் தேர்வாணைய தேர்வுகள் (UPSC) அதனையொட்டிய இரண்டு நாட்களுக்குள்ளாக வருவதையும் குறிப்பிட்டு இருந்தேன். 

அதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாப் செலக்சன் கமிஷன் தலைவர் எஸ்.கிஷோர் (DO HQ - C - 1107/ 5/  2023 / C2 / 28.06.2023) தேர்வு அட்ட வணை பல மாதங்களுக்கு முன்பா கவே தயார் ஆகிறது. ஒரு தேர்வை  தள்ளி வைத்தால் ஒட்டு மொத்த  தேர்வுச் சுற்றுகளே தாமதமாகும். ஏற்  கெனவே மனதளவில் தயாராகி  உள்ள தேர்வர்கள் பாதிக்கப்படு வார்கள், தாமதமான தேர்வு முடிவு களால் லட்சக்கணக்கான தேர்வர்கள்  பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அத னால் தேர்வுகளை தள்ளி வைக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.  மேற்கூறிய காரணங்களில் முதல்  இரண்டை புரிந்து கொள்ள முடி கிறது.  ஆனால் மனதளவில் தயாரான தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம் ஏற்புடையது அல்ல. இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்  பித்த தேர்வர்களும் மன பாதிப்பை என்ன சொல்வது? ஆகவே எதிர்  காலத்தில் இது போன்ற அரசுத் துறை  நியமன தேர்வுகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதை உறுதி செய்ய ஊழியர் நலன் அமைச்சகம் (Ministry of Personnel) ஏதாவது  வழிமுறையை கண்டறிய வேண் டும்.  நான்காவது காரணம், தாமத மான தேர்வு முடிவுகளால் லட்சக்க ணக்கான தேர்வர்கள் பாதிக்கப்படு வார்கள் என்பது முற்றிலும் பொருத்த மானது அல்ல. லட்சக் கணக்கான அரசுப் பணி காலியிடங்கள் ஆண்டுக் கணக்கில் நிரப்பப்படாததால் கோடிக்கணக்கானவர்கள் உரிய காலத்தில் தேர்வர்களாகவே மாற  முடிவதில்லையே! அப்புறம் எப்படி  ஊழியர்களாக மாறுவது!  “ஒரே தேசம் ஒரே தேர்வு” என்  றெல்லாம் தேசத்தின் பன்முகத் தன்  மையை மறுதலிக்க முனைகிற அர சாங்கத்தால் ஒரே தேதியில் தேர்வு கள் வருவதை இவ்வளவு நவீன தக வல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலத்தில் தவிர்க்க இயலாதா? இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.