தேனி, ஏப்.1- தேனி மாவட்டம் போடி நகராட்சி காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் ஜெகநாதன் (46). இவர் உறவினர்களுடன் மதுரை சென்று விட்டு போடிக்கு காரில் வந்து கொண்டிருந்த னர். காரை ஜெகநாதன் ஓட்டியுள்ளார். போடி- தேனி சாலையில் அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே வந்தபோது ஜெகநாதன் தூக்க கலக்கத் தில் காரை சாலையை பிரிக்கும் தடுப்புச் சுவ ரில் மோதியுள்ளார். இதில், காரில் பயணம் செய்த ஜெகநாதன், போடி நகராட்சி காலனியை சேர்ந்த சுருளி ஆண்டவர் (54), நல்லம்மாள் (45), அழகம்மாள் (80), பவானி (38), மதுரை விளாச்சேரியை சேர்ந்த கர்ப்பிணி அருணா (19) ஆகியோர் காய மடைந்தனர். இதுகுறித்து போடி தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.