states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மருத்துவம் படிக்க 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ  இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப  பதிவு ஜுன் 29 ஆம் தேதி தொடங்கி யது. இது வரையில் 30 ஆயிரம் பேர்  விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்ய ஜுலை 10 ஆம்  தேதி கடைசி நாள் ஆகும். வருகிற 15 ஆம்  தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் தாமத மின்றி உடனே விண்ணப்பிக்க வேண்டும்  என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இம்மாத இறுதி யில் கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவ லாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங் களில் மலைப்பகுதிகளில் ஒரு சில  இடங்களில் கன முதல் மிக கனமழை யும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை,  தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்திருக்கிறது.