states

‘ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம்’

சென்னை,  ஜூலை 9-  ஒன்றிய பாஜக அரசால்  எங்கள் ஆட்சிக்கு வந்தா லும்கவலைப்பட மாட்டோம் கொள்கையில் உறுதி யோடு நிற்போம் என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயி றன்று நடைபெற்ற திரா விட இயக்க எழுத்தாளர் சங்ககொலி திருநாவுக்கரசு இல்ல திருமண விழா வில் கலந்து கொண்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி யதாவது:-தமிழ்நாட்டில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. காலை சிற்றுண்டி, பெண்க ளுக்கு இலவச  பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதா ரணமாகும். ஒன்றிய பாஜக வால் அரசால் இந்தியா வுக்கே பேராபத்து வந்து கொண்டிருக்கிறது.  2014-இல் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை யாவது பாஜக நிறை வேற்றியதா? என்றால் இல்லை. விவசாயிகள் போராட்டத்தை கண்டும் காணாமல் இருந்த ஆட்சி பாஜக ஆட்சி. ஆண்டுக்கு 2  கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதை செய்ய வில்லை. கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தரு வேன் என சொன்னார்கள். இதுவரை ரூ.15 கூடதர வில்லை.  சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்துள்ளோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக் குவரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம்.   இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பல்வேறு அரசி யல் கட்சித் தலைவர்கள், மாநில அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.