states

img

காவியிலிருந்து நீலம், அடர் சாம்பலுக்கு மாற்றம் ராஜஸ்தான் மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை!

ஜெய்ப்பூர், டிச.11- ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, பள்ளி மாணவ - மாணவியர்க்கான சீருடை வண்ணத்தை மாற்றியுள்ளது.  கடந்த 2017-ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடந்தபோது, மாணவர்களின் சீருடை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அப்போதே, இது ஆர்எஸ்எஸ் சீருடை போல இருப்பதாக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் நடந்து, தற்போது காங்கிரசே ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், சீருடை வண்ணத்தை மாற்றி அமைத்துள்ளது. அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்கள் நீலச் சட்டை மற்றும் அடர் சாம்பல் டிரவுசர் அல்லது பேண்ட்டும், மாணவிகள் நீல நிற குர்தா அல்லது சட்டைகள் மற்றும் அடர் சாம்பல் சல்வார் அல்லது பாவாடை அணிய வேண்டும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

;