states

img

கல்பனா சோரன் பதவியேற்பு!

ராஞ்சி, ஜூன் 10 - ஜார்க்கண்ட் முன்னாள் முதல் வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை, ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத் துறையானது, நில மோசடி புகாரில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்றும் கணக்குப் போட்டது. ஆனால், தான் பதவி விலகி, மூத்த தலைவரான சம்பய் சோரன் முதல்வர் ஆவதற்கான வழிவகைகளை செய்த பிறகே, ஹேமந்த் சோரன் சிறை சென்றார். இதனிடையே, ஹேமந்த் சோரன் இடத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொண்டார். காலியாக இருந்த காண்டே சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ பதவிக்கும் அவர் போட்டியிட்டார். இதில், பாஜக வேட்பாளர் திலீப் குமார் வர்மாவை 27 ஆயிரத்துக்கும் அதி கமான வாக்குகளில் தோற்கடித்தார். இந்நிலையில், திங்களன்று (ஜூன் 10) கல்பனா சோரன் எம்.எல். ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் ரபீந்திரநாத் மாத்தோ பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்மூலம், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

;