states

img

கேரளத்தில் நல ஓய்வூதியம் ரூ.600 லிருந்து ரூ.1400 ஆக உயர்வு.... எல்டிஎப் வழங்கியது ரூ.31,327 கோடி; யுடிஎப் ரூ.9,311 கோடி.... 19 மாத நிலுவைத் தொகை வழங்கியதும் இடதுசாரி அரசே....

திருவனந்தபுரம்:
யுடிஎப் அரசாங்கமே சமூகநல ஓய்வூதியத்தை ரூ .1,500 ஆக உயர்த்தி, அதிகமான மக்களுக்கு வழங்கியது என்ற முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறியது கேரளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் மத்தியில் பரிகாசத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவர் தலைமையிலான யுடிஎப் அரசு விட்டுச் சென்றநிலுவைத் தொகையை நல ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கியதும், தகுதியுடைய வர்களுக்கு ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்யும் எல்.டி.எப் அரசு உள்ளாட்சித் தேர்தல்களில் பரவலாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த முன்னாள் முதல்வரே பொய் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இதே பாணியில் பாஜகவும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

நல ஓய்வூதியம் இடது அரசின் முகம்
எல்.டி.எப் அரசாங்கங்கள் மட்டுமே எப்போதும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றன. அனைத்து எல்.டி.எப் அரசாங்கங்களும் ஓய்வூதியம் ஒரு சலுகை அல்ல, பின்தங்கியவர்களின் உரிமை என்பதை உறுதிப்படுத்த கவனமாக இருந்தன. விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஈ.கே.நாயனார் அரசு 1980 இல் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ .45 வழங்கப்பட்டது, அதற்கானஆண்டு வருவாய் ரூ .1,500 ஐ தாண்ட வில்லை. அப்போது 2.94 லட்சம் ஏழை மக்களுக்கு ஓய்வூதியம் கிடைத்தது. 1987 ஆம் ஆண்டில், இரண்டாவது நாயனார் அரசாங்கம் ஓய்வூதியத்தை ரூ.60 ஆக அதிகரித்தது. முதியோர் ஓய்வூதியம் ஆகஸ்ட் 1995 இல்தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்எஸ்ஏபி) ஒரு பகுதியாக வருகிறது. இருப்பினும், அப்போதைய யுடிஎப் அரசாங்கம் அதை செயல்படுத்தவில்லை. 1996 இல் எல்.டி.எப் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் ஓய்வூதியம் ரூ.75 அமலாக்கப்பட்டது.

85 சதவிகிதம் ரூ.525
2011மே 18, அன்று யுடிஎப் அரசு ஆட்சிக்குவந்தபோது, ஓய்வூதியம் மாதம் ரூ.300. பின்னர்,தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டன. இருப்பினும், இது மொத்த ஓய்வூதிய பெறுநர்களில் 15 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. உம்மன் சாண்டியின் ஆட்சியில் 85 சதவிகிம் பேருக்கு ரூ.525 மட்டுமே கிடைத்தது. உம்மன் சாண்டி அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் 85 சதவிகிதம் பேருக்கு ஓய்வூதியத்தை வெறும்ரூ.225 மட்டுமே உயர்த்தியது. இந்த தொகையையும் நிலுவையாக வைத்துவிட்டு 19 மாதங்களுக்குப் பிறகு உமன் சாண்டி ராஜினாமா செய்தார். பின்னர் வந்த எல்டிஎப் அரசு இந்த ஏழை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.806 கோடி நிலுவைத் தொகையை வழங்கியது.

தகுதியற்ற பயனாளிகள்
ஓய்வூதிய உரிமைக்கான ஆண்டு வருவாய் 2013 வரை, ரூ.22,250 ஆகும். அன்றையபயனாளிகளின் எண்ணிக்கை 18 லட்சம்.உம்மன் சாண்டி அரசு ஒரே நேரத்தில் வருமான வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தியது. பயனாளிகளின் எண்ணிக்கை 27 லட்சமாக உயர்ந்தது. குழு அடிப்படையிலான ஓய்வூதியதிட்டத்தில் காங்கிரஸ்காரர்களை பயனாளி களாகத் திணித்தனர். தவறு கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆனது. 2014 ஆம் ஆண்டில், வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது, ஆனால் பயனாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

தகுதியான அனைவருக்கும் உரிமை
எல்டிஎப் அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஓய்வூதிய உயர்வை அமல்படுத்தத்தொடங்கியது. முதற்கட்டமாக அனைத்து ஓய்வூதியங்களும் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஏப்ரல் 1, 2017 முதல் ரூ.1100 ஆகவும். ஏப்ரல் 1, 2018 முதல் ரூ.1200, ஏப்ரல் 1, 2019 முதல் ரூ.1300, 2020 ஏப்ரல் முதல் ரூ.1400 என உயர்த்தப்பட்டது. அரசு பொறுப்பேற்றபோது, ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கை 33.99 லட்சம். இன்று இது 60.31 லட்சமாக உயர்ந்துள்ளது. நல வாரிய ஓய்வூதியம் 10.87 லட்சம்.மாத ஓய்வூதிய செலவு 2016 இல் ரூ.227கோடியிலிருந்து இன்று ரூ.710 கோடியாக உயர்ந்துள்ளது. யுடிஎப் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.9,311 கோடி ஓய்வூதியம் வழங்கியது. இந்த அரசு 2020 நவம்பர் வரை மட்டும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.27,417 கோடியை வழங்கியுள்ளது. நல வாரியங்கள் மூலம் ரூ.3910 கோடி என மொத்தம் ரூ.31,327 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரிமுதல் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பப்பட உள்ளது.

\யாருக்கும் குறைக்கப்படவில்லை
எல்டிஎப் அரசு பொறுப்பேற்கும்போது, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் ரூ .1500 ஆகும். அனைத்து பிரிவுகளின்ஓய்வூதியத் தொகையும் ஒருங்கிணைக்கப்பட்டபோது கூட, இது தொடர்ந்தது. தற்போது 6.11 லட்சம் பேருக்கு இந்த விகிதத்தில் ஓய்வூதியம் உள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களில் 10 முதல் 15 சதவிகிதம் பேர்தகுதியற்றவர்கள் என்று 2015 சிஏஜி அறிக்கைகண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, ஓய்வூதி யதாரர்களின் பட்டியல் ஆராயப்பட்டது. உயர் வருவாய் உள்ள தகுதியற்றவர்கள், பல ஓய்வூதியம் பெறுவோர், அரசு ஊழியர்கள் மற்றும் சேவை ஓய்வூதியம் பெறுவோர் விலக்கப்பட்டனர். இருப்பினும், தகுதியுள்ள அனை வருக்கும் ஓய்வூதியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.ரூ.2000 க்கு மேல் ஈபிஎஃப் / எக்ஸ் கிராஷியா ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்தவொரு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தையும் ஆகஸ்ட் 2017 முதல் ரூ.600 என்ற விகிதத்தில் வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஈ.பி.எஃப் / எக்ஸ் கிராஷியா ஓய்வூதிய வரம்பு ரூ.2,000 முதல் ரூ .4,000 வரை அதிகரிக்கலாம் என பரிசீலிக்கப்படுகிறது.

37.5 லட்சம் பேருக்கு மத்திய உதவி இல்லை
சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து செலுத்தப்படுகிறது என்று சங்க பரிவார் பிரச்சாரம் செய்கிறது. என்எஸ்ஏபியில், மத்திய அரசு ரூ.300 முதல் ரூ.500 வரை 14.9 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. மீதமுள்ள ரூ.900 முதல்ரூ.1100 வரை அரசு கருவூலத்தில் இருந்து செலவிடப்படுகிறது. மத்திய அரசின் எந்த உதவியும் இல்லாமல் 37.5 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.1400 கேரளை அரசு வழங்குகிறது.

;