states

கேரளத்தில் யுடிஎப் 18; எல்டிஎப் 1; என்டிஏ 1 ஆற்றிங்கலில் பி.ஜாய் 1708 வாக்குகளில் தோல்வி

திருவனந்தபுரம், ஜுன் 4- மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18இல்  ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. எல்டிஎப்பும் என்டிஏயும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. ஆற்றிங் கல் தொகுதியில் எல்டிஎப்பின் பி.ஜாய் மிக  குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  வாய்ப்பை இழந்தார். 

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி.ஜாய் 1708 வாக்குகளில் ஐக்கிய ஜனநா யக முன்னணியின் அடூர் பிரகாசிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆற்றிங்கல் தொகுதியில் என்டிஏ சார்பில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரன் மூன்றா வது இடம்பிடித்து தோல்வியை சந்தித்தார். இதுபோல் அருகில் உள்ள திரு வனந்தபுரம் தொகுதியில் மற்றொரு ஒன்றிய அமைச்சரும் ஏசியாநெட் ஊடக  உரிமையாளருமான ராஜீவ் சந்திரசேகர், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பா ளர் சசி தரூரிடம் தோல்வி அடைந்தார்.

அதே நேரத்தில் திருச்சூர் மக்கள வைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி 74,686 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சுனில் குமார் 3,37,652 வாக்குகளும், யுடிஎப் வேட்பாளர் கே.முரளீதரன் 32,8124 வாக்குகளும் பெற்றனர். 

;