states

img

நாடு முழுவதும் ஒரே உணர்வலை மோடி ஆட்சி வீழ்வது உறுதி!

திருவனந்தபுரம், மார்ச் 30-
இந்தியாவைக் குறித்து பொதுவான மதிப்பீடு. ஜனநாயகம்  சிறப்பான முறையில் உள்ளது என்பதாகும். ஆனால், இது ஜனநாயகம் தானா என்கிற சந்தேகம் உலக அரங்கில் வலுத்துள்ளது. நமக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பன்னியன் ரவீந்திரனுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: 

இப்போது மக்கள்  முடிவு செய்துவிட்டனர்
இந்த தேர்தலின் முக்கியத்து வம் குறித்து ஆரம்பக்கட்டத்தி லேயே மக்கள் ஒரு நிலைப்பாட் டுக்கு வந்துள்ளனர். சாதாரணமாக தேர்தல் பணிகளில் ஒன்றிரண்டு கட்டங்களை கடந்த பிறகே ஒரு பகுதியினர் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதை முடிவு செய்  வார்கள். ஆனால், முற்றிலும் மாறு பட்ட ஒரு நிலையை இந்த தேர்த லில் பார்க்கலாம். அதற்கு காரணம்  நமது நாட்டின் இன்றைய சூழலே யாகும். நாடு ஆபத்துக்குள்ளா வதை தடுக்க வேண்டும் என அனை வரும் சிந்திக்கின்றனர். நாடு ஆபத்  தின் விளிம்பில் உள்ளது என்பதை  அனைவரும் அறிந்து வைத்துள்ள னர்.

நமது நாட்டின் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது  மிக முக்கியமானது. அந்த வகை யில் மதச்சார்பின்மையை பாது காக்கவே நமது மக்கள் விரும்பு கின்றனர். அதனால்தான் மதச்சார்  பின்மைக்கு ஆபத்து விளைவிக் கும் ஒவ்வொரு நிகழ்வும் நாட்டில் ஏற்பட்டபோதெல்லாம் மக்கள் கவலை தெரிவித்தனர். 

உலக அமைப்புகள்,  முக்கிய நாடுகள் விமர்சனம் 
இந்தியா மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற நாடு என்கிற நிலை யில், பொதுவாக உலகத்தின் முன்பு  அங்கீகாரம் பெற்றிருந்தது. அதை  இழக்கும் நிலை மோடி ஆட்சியில்  ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை உலக அமைப்பு கள், முக்கியமான நாடுகள் விமர்  சிக்கின்றன. இதில் ஐக்கிய நாடு கள் சபையும் உள்ளது; ஆம்னஸ்டி இன்டர்நேசனலும் உள்ளது. அமெ ரிக்கா, தெற்காசிய நாடுகள் என பல  நாடுகள்- நமது நாட்டுடன் நல்லு றவு கொண்டவர்கள் உட்பட கடுமை யான விமர்சனங்களை வெளிப் படுத்தியுள்ளன. உலகம் நம்மைப்  பார்த்து, நீங்கள் அமல்படுத்துவது ஜனநாயக முறைதானா? என்று  கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்  ளது.

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வரும் ஜெர்மனியும் அமெ ரிக்காவும் அந்த கேள்வியை எழுப்பி வருவதை நாம் பார்க்கி றோம். இந்தியாவில் நீதி நியா யங்கள் எப்படி நடக்கிறது? இங்கு  சட்டத்தின் பாதுகாப்பு அனைவ ருக்கும் பாகுபாடின்றி கிடைக்கி றதா? சட்டத்தின் முன்பு அனை வரும் சமமாக பார்க்கப்படுகிறார் களா? தங்களுக்கு விருப்பம் இல்  லாதவர்களை அச்சுறுத்தும் நிலை  உள்ளதா? அப்படி இருந்தால் அது  ஜனநாயகம் ஆகுமா? என்பது போன்ற சந்தேகங்களை உலக நாடு கள் எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மதச்சார்பின்மையை ஆபத்துக்குள்ளாக்கும் முயற்சி கள், மறுபுறம் நாட்டின் ஜனநாய கத்தை தகர்க்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

சுதந்திரம் ஆபத்துக்கு உள்ளாகும் நிலை 
நமது நாட்டின் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கும் நிலை இருந்திருக்க வேண்டும்.  மக்கள் அதையே விரும்புகிறார கள். சுதந்திர இந்தியா சாதாரண  நிலையில் அனைத்து விதமான  செயல்பாடுகளுக்கும் சுதந்தி ரத்தை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இங்கே பல சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்  டத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு  ஏற்படாத வகையிலான நிலை பாடே, அது நம்பிக்கை என்றா லும் கருத்துகள் என்றாலும் மேற்  கொள்ள வேண்டும் என கருது கிறார்கள். சுதந்திரம் ஆபத்துக்கு  உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றின் மொத்த வெளிப்பாடு நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்  பாடும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படு கிறது என்பதாகும்.

நாட்டு மக்கள் மோடியை வீழ்த்துவது உறுதி
இன்று தேசமே ஆபத்தான கட்  டத்தின் விளிம்பில் உள்ளது. அத்த கைய ஒரு சூழ்நிலையில் இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த தேர்தலில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம், தேசிய  ஒருமைப்பாடு, ஒட்டுமொத்தமாக நமது நாட்டின் பாதுகாப்பு என்ப தையே மக்கள் விரும்புகிறார்கள். அதற்கேற்ற நிலைப்பாட்டை மேற்  கொள்ள வேண்டும் என ஒட்டு மொத்த மக்களும் சிந்திக்கிறார்கள்.  இதற்கு எதிரான நிலைப்பாடு களுக்கு தலைமை தாங்கும் பாஜக வை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பதே நாடு முழு வதும் ஏற்பட்டுள்ள உணர்வு.

அதன் தொடர்ச்சியாக மாநி லங்கள்தோறும் விரிவான ஒற்  றுமை ஏற்பட்டுள்ளதை பார்க்க லாம். தங்களை வீழ்த்த முடியாது  என்கிற எண்ணத்தில் தற்போது பாஜகவும் ஒன்றிய அரசும் உள்  ளன. நரேந்திர மோடி அப்படி  தோல்வியுறத்தக்கவர் அல்ல என்ற  பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே மோடியை இங்கு தோற்கடித்தவர்கள். நாடு முழுவதும் இப்போது அந்த நிலை  ஏற்படும்.

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.