states

img

கே போன் மாதிரியை பின்பற்றும் தமிழகம்; கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

கேரளத்தின் முன்மாதிரியான கே போன் குறித்து தெரிந்துகொள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செவ்வாயன்று திருவனந்தபுரம் வந்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கே-போன் திட்ட முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற பெயரில் தமிழ்நாடு கே போன் மாதிரி செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஐடி செயலாளர் ஜே குமரகுருபரன், டான்பினெட் கார்ப்பரேஷன் எம் டி ஏ ஜான் லூயிஸ், கேரள ஐ டி செயலாளர் டாக்டர். ரத்தன் யு கேல்கர், கே போன் எம்டி டாக்டர். சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டசபைக்கு வந்த தமிழக குழுவினர் சட்டசபை நடவடிக்கைகளையும் பார்வையிட்டனர்.