states

img

பாலக்காடு கோட்டத்தை கைவிடக்கூடாது ரயில்வே அமைச்சருக்கு அமைச்சர் வி.அப்துர் ரஹிமான் கடிதம்

திருவனந்தபுரம், மே 13- பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மூடும் முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என கேரள அமைச்சர் அப்துர் ரஹிமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே  அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்தார்

கேரளத்தின் மீது ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பு மற்றும் பழி வாங்கும் போக்குக்கு மற்றொரு உதார ணம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை ரத்து செய்தது. பயணிகளின் எண்ணி க்கை மற்றும் வருவாயில் பாலக்காடு கோட்டம் மிகவும் முன்னணியில் உள்ளது. குறைகளை சுட்டிக்காட்டா மல் இந்த கோட்டத்தை ஒழிப்பது கேர ளத்துக்கு எதிரான மறைமுக நட வடிக்கையாகும். ரயில்வே வளர்ச்சி யில் கேரளம் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வருகிறது. இதேவேளை யில், தற்போதைய வசதிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கை யானது மக்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் எனவும் அமைச்சர் தெரி வித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பாலக்காடு கோட்டத்தைத் துண்டித்து சேலம் கோட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு பாலக்காடு கோட்டத்தை வலுவிழக்கச் செய்ய திட்டமிட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாலக்காட்டை மங்களூருவின் ஒரு பகுதியாக மாற்ற ஒன்றிய அரசு முயற்சித்தது. அன்று கேரளம் கடும்  எதிர்ப்பு தெரிவித்து அதனை முறி யடித்தது.

ஒன்றிய அரசு அனைத்துத் துறை களிலும் கேரளத்தைப் புறக்கணித்து விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. யுடிஎப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராக சுண்டு விரலைக் கூட  தூக்கவில்லை. கேரளத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாடுகளை அடிக்கடி எடுத்தனர். கேரளத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் (வி.முரளி தரன்) பொய்களைக் கூறி மக்களை தவ றாக வழிநடத்த முயற்சிக்கிறார். மேலும் கேரளத்தின் கோரிக்கைகளை தடுக்க முன் நிற்கிறார். ரயில் பாதை இரட்டிப்பு, புதிய தண்டவாளங்கள் மற்றும்  புதிய ரயில்களை ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். கேரளத்தைப் புறக்கணிக்கும் ரயில்வேக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பாலக்காடு கோட்டத்தை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்க்க கேரளம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹிமான் கேட்டுக் கொண்டார்.