states

img

கேரள உள்ளாட்சித் தேர்தலில் எல்டிஎப் மகத்தான வெற்றி பெறும்: பினராயி....

கண்ணூர்:
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அனைவரும் தங்களுடன் இருப்பதாகவும், எல்டிஎப்ஒரு வரலாற்று வெற்றியைப் பெறும் என்றும்கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முதல்வர் தனது சொந்த ஊரான கண்ணூர்மாவட்டம் தர்மடத்தில் உள்ள சேரிக்கல் ஜூனியர் பேசிக் பள்ளியில் வாக்குப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஒரு அரசாங்கத்திற்கு எதிராக இத்தனைபொய்களும் அவதூறுகளும் பரப்பப்படுவதைப் பார்த்து, மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அரசுக்கு ஆதரவாக ஒன்றாக நிற்கிறார்கள். இந்த அரசாங்கத்தை எந்த வகையிலும் பலவீனப்படுத்த முடியுமா என்று சிலர் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். இது மத்திய நிறுவனங்களின் உதவியுடன் அரசியல் ரீதியாகவும் ஊக்கம் பெறுகிறது. டிசம்பர் 16 ஆம் தேதி வாக்குகளின் எண்ணிக்கை முடிவடையும் போது, யார் சோர்வாக இருக்கிறார்கள், யார் வருத்தப்படுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஒரு வரலாற்று வெற்றியை அடையும்.

அதன்பிறகும் இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகள் அரசாங்கத்திற்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுப்பார்கள். அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினால், அதைச் செய்யலாம். அதையெல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள். மக்களிடமிருந்து நல்ல ஆதரவுஎல்டிஎப்புக்கு கிடைத்துள்ளது. நாம் வெற்றிபெற வாய்ப்பில்லாத சில பகுதிகளில் கூடஇந்த முறை வெற்றி பெறுவோம்.  இந்தத்தேர்தல் கேரள முஸ்லிம் லீக்கின் அஸ்திவாரங்களை உலுக்கும். நான்கு வாக்குகளுக்காக ஜமாத்-இ-இஸ்லாமியுடன் கைகோர்த்துள்ள லீகை மக்கள் நிராகரிப்பார்கள்.கோவிட் மருந்து அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியதில்தேர்தல் நடத்தை விதி மீறல் ஏதும் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். கோவிட்தொடங்கியதிலிருந்து முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் மாநிலமாக கேரளம்இருந்து வருகிறது. வேறு எங்கும் அப்படி ஒருநிலை இல்லை. எனவே, கோவிட் தடுப்புக்குமுக்கிய உதவியாக இருக்கும் தடுப்பூசிக்கு பணம் வாங்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

;