states

img

கேரள உள்ளாட்சித் தேர்தல்... இன்று 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு..

திருவனந்தபுரம்:
கேரள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையிலேயே வாக்குப் பதிவுமையங்களின் முன்னால் நீண்ட வரிசைகளில் காத்து நின்று மக்கள் வாக்குப்பதிவு செய்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரைவாக்குப்பதிவு நடந்தது. மொதம் 72.67 சதவிகிதம்வாக்குகள் பதிவாயின.

கோவிட் கட்டுப்பாடுகளுக்கு இணங்க, காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. சில இடங்களில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதடைந்ததால் வாக்களிப்பு சிறிது நேரம் தாமதமானது. ஆலப்புழாவில் 7 இடங்களிலும், பத்தனம்திட்டாவில் இரண்டு இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. பத்தனம்திட்டா மாவட்டம் ராந்நியில் வாக்கு பதிவு செய்தபின்னர் புத்துரம்பிலில் மத்தாய் என்பவர் மயங்கிவிழுந்து இறந்தார்.

கோவிட் பாதிப்பு
கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கண் காணிப்பில் இருப்பவர்களுக்கும் விரிவான வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. தபால் வாக்குகள் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் சான்றளிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் செவ்வாயன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, வாக்கெடுப்பு முடிவடையும் வரை வாக்களிக்கலாம். வரிசையில் உள்ளஅனைத்து வாக்காளர்களும் வாக்களித்த பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். சுகாதார அதிகாரியின் சான்றிதழ் கட்டாயமாகும். கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பு வாக்குப்பதிவுஅதிகாரிகளும் முகவர்களும் பிபிஇ கிட் அணிவது கட்டாயம்.

வாக்குச் சாவடியில் உயிரிழப்பு
பத்தனம்திட்டா ரன்னியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தபின் அங்கேயே மயங்கிவிழுந்த புத்துரம்பிலில் மத்தாய் உயிரிழந்தார்.

இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
கேரளத்தில் வியாழனன்று நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஐந்து மாவட்டங்களில் 98,57,208 வாக்காளர்கள் உள்ளனர். 47,28,489 ஆண்கள், 51,28,361 பெண்கள், 93 மூன்றாம் பாலினத்தோர் மற்றும் 265 வெளிநாட்டவர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 57,895 பேர் உள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள 451 உள்ளாட்சி அமைப்புகளில் 8116 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும்.இதற்காக 12,643 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 473 பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் நிறுவப்பட்டது. 63,187அதிகாரிகள் தேர்தல் பணிக்காக அமர்த்தப் பட்டனர்.கோவிட் பாசிட்டிவ் ஆகி தனிமைப்படுத்தலுக்குள் நுழைந்தவர்கள் புதன்கிழமை பிற்பகல்3 மணி முதல் வியாழக்கிழமை வாக்களிக்கும் இறுதி நேரம் வரை சுகாதாரத் துறையால் நியமிக்கப்பட்ட சுகாதார அலுவலர் வழங்கிய சான்றிதழுடன் நேரடியாக சாவடியில் வாக்களிக்க முடியும். வேட்பாளர்கள் இறந்ததைத் தொடர்ந்து,கலாமாசேரி நகராட்சியின் 37 ஆவது வார்டிலும்,திருச்சூர் மாநகராட்சியின் புல்லழியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் புதன்கிழமை காலை 8 மணி முதல்ஐந்து மாவட்டங்களில் உள்ள 96 மையங்களில் விநியோகிக்கப்பட்டன. விநியோக மையங்களில் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையர் வி.பாஸ்கரன் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.