states

img

கொல்லத்தில் சிபிஎம் வேட்பாளர் எம்.முகேஷ் வேட்புமனு தாக்கல்

கேரளம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பு மனுவை கொல்லத்தில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் திரைக்கலைஞர் எம்.முகேஷ் தாக்கல் செய்தார். அவர் செலுத்த வேண்டிய பணத்தை மீனவர்கள் கொடுத்தனர். சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் இருந்து எல்டிஎப் தலைவர்கள் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் என்.தேவிதாஸ் முன்பு. இரண்டு தொகுப்பு மனுக்கள் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், பி.எஸ்.சுபால் எம்எல்ஏ  உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.