states

img

கேரள பள்ளி பேருந்து விபத்து - 5 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி

மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த கேரள தனியார் பள்ளி பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 5 மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள பசேலியோஸ் வித்யாநிகேதன் எனும் தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். சுற்றுலாவுக்கு 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற சுற்றுலா பேருந்து முன்னே சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து மீது மோதியது. இதனால் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

;