states

img

குஜராத் படகு விபத்து: 18 பேர் மீது வழக்குப்பதிவு

குஜராத் படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஹர்ணி ஏரிக்கு 4 ஆசிரியர்கள் தலைமையில் 24 பள்ளி மாணவர்கள் வியாழன் அன்று சுற்றுலா வந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 14 பள்ளி மாணவர்களும், 2 ஆசிரியர்களும் என மொத்தம் 16 பேர் பலியாகினர். ஒரு மாணவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றது.
இந்த நிலையில், படகு கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.