குஜராத் மாநிலம் அகமதாபாத் உள் ளிட்ட மாவட்டங்களில் ஞாயிறன்று மாலை 6 மணி முதல் அடுத்த 12 மணி நேரத்தில் 76 மிமீ மழை பதிவாகிய நிலை யில், பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. குஜராத் மட்டுமின்றி மத் தியப்பிரதேசத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளி லும் கனமழை பெய்து வருவதால் சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றிற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குஜராத் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 9,613 பேர் பாதுகாப்பான இடங்க ளில் தங்கவைக்கப்பட்டனர். பல கிரா மங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடு முறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கன மழை காரணமாக அகமதாபாத் கோட்டத் திற்கு உட்பட்ட சில ரயில்கள் ரத்து செய் யப்பட்டன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் பஞ்சமஹால், தாஹோத், கெடா, ஆர வல்லி, மஹிசாகர், பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் “சிவப்பு எச்ச ரிக்கை” விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.