states

img

பாஜகவுக்காக மாநில தலைவரை நீக்கிய ஜேடிஎஸ்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜகவிற்கு அடுத்தபடியாக 3-ஆவது பெரிய கட்சியாக முன்  னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) உள்ளது.  தெற்கு கர்நாடகா, மைசூரு மண்டலங்க ளில் ஜேடிஎஸ் கட்சிக்கு  வலுவான வாக்கு  வாங்கி உள்ள நிலை யில், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கி ரஸ் கட்சியை எதிர்த்து களமிறங்குவதாக கூறி ஜேடிஎஸ் கட்சி கடந்த மாதம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.  பாஜக கூட்டணியில் இணைந்ததால் ஜேடிஎஸ் கட்சியில் இருக்கும் முஸ்லிம்  தலைவர்கள் முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி, மாநில துணைத் தலைவர் சையத் சபிபுல்லா சையத், முக்கிய பொறுப்  பாளர்கள் முகமது அல்தாப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், முன்னாள் இளைஞர் அணி  தலைவர் என்.எம். நூர் ஆகியோர் கட்சி யில் அடுத்தடுத்து வெளியேறினர். மேலும் ஜேடிஎஸ் மாநில தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சி.எம். இப் ராஹிம்,”எனது தலைமையிலான  ஜேடிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வில்லை. தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கட்சியை  பலி கொடுத்துவிட்டனர். இதனால் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோ சனை நடத்த இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் எங்களது அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து அறிவிக்க இருக்கி றேன்” என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார்.  இதனால் ஜேடிஎஸ் கட்சி இரண்டாக உடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், வியாழனன்று ஜே.பி. பவனில் ஜேடிஎஸ் கட்சியின் ஆலோசனை கூட்  டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில், பாஜக கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியசி.எம்.  இப்ராஹிமை கட்சியில் இருந்து நீக்கி,  குமாரசாமியை புதிய மாநில தலைவராக  நியமிப்பதாக தேவகவுடா கூறியுள்ளார். முன்னாள் முதல்வரான குமாரசாமி தேவ கவுடாவின் மகனாவார்.