திங்கள், மார்ச் 1, 2021

states

img

கோவா சுற்றுலா சென்ற 11  பேர் பலி

கர்நாடகாவிலிருந்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் தவனகரே பகுதியிலிருந்து 16 பெண்கள் விடுமுறையொட்டி வேன் ஒன்றில் கோவா நோக்கிச் சென்றனர். லிட்டிகட்டி என்ற இடத்தின் அருகே எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு வாகனங்களுமே அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்தது. சுற்றுலா வேனின் டிரைவர் பிரவீன் மற்றும் வேனில் இருந்த  10 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் ஐந்து பெண்கள் மற்றும் டிப்பர் டிரக்கின் டிரைவர் பலத்த காயம் அடைந்து தற்போது ஹூப்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;