பருவநிலை மாற்றத்தால் இந்தி யாவில் வானிலை மாற்றங்கள் தீவிரமடைந்து வருகிறது. தென் மாநிலங்களில் முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலை யில், வட மாநிலங்களில் ஆப்பிரிக்க பாலைவன பூமிக்கு நிகரான வெயில் கொளுத்தி வருகிறது. தில்லி, ராஜஸ் தான், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, ஹரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டி கர் உள்ளிட்ட மாநிலங்களில் 48 முதல் 50 டிகிரி செல்சியஸ் அளவில் (தோராயமாக ஒரு சில இடங்களில்) வெப்ப அலை வீசி வருவதால் அங்கு இயல்பு நிலை மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதால் வடமாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி யுள்ளது.
இந்நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதி மாநிலமான ஒடிசாவில் வெயி லின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அங்கு வெப்ப பக்க வாதத்தால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்தனர். ஒடிசாவில் கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் 99 பேர் வெப்ப பக்கவாதத் தால் உயிரிழந்தனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் வெயில் காலம் தொடங்கியதிலிருந்து வெப்ப பக்கவா தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்குகிறது
வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை பாஜக ஆளும் மாநில அரசுகள் குறைத்து மதிப்பிட்டு வருவதால், வடமாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக ஊடகங்களில் குறைத்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் வடமாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி யுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிர தேசம், பீகார் ஆகிய 3 மாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரி ழந்தோர்களின் எண்ணிக்கையை உண்மையாக மதிப்பீடு செய்தால், வட மாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டும் சூழல் உருவாகும். மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை பாஜக அரசுகள் திட்டமிட்டு மறைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.