states

ஒடிசாவையும் புரட்டியெடுத்த “மிக்ஜம்” புயல்

வங்கக்கடலில் உருவாகிய “மிக் ஜம்” புயல் ஆந்திர மாநிலம்  நெல்லூர் அருகே மணிக்கு 100  முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்றுடன்  புதனன்று கரையை கடந்தது. இந்த  புயலால் ஆந்திர மாநிலத்தின் வட கட லோரப் பகுதிகள், தமிழ்நாட்டின்  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும்  பாதிப்பை எதிர் கொண்டுள்ளது. இந்த புயலால் இரு மாநிலங்களிலும் 14 பேர் உயிரிழந்த நிலையில், ஒடிசாவையும் “மிக்ஜம்” புயல் புரட்டியெடுத்துள்ளது. 

ஆந்திராவில் இருந்து சென்ற “மிக்  ஜம்” புயல் வியாழனன்று சத்தீஸ்கரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் தெற்கு ஒடிசாவின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், நாராயண்பட்னா தொகுதிக்கு உட்  பட்ட பாரிபுட்டில் கடும் நிலச்சரிவு ஏற் பட்டு அப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த சூறாவளி காற்று வீசிய தால் கஜபதி மாவட்டத்தில் பயிர்கள் சேத மடைந்துள்ளன. தமிழ்நாடு அரசைப் போன்று போதுமான அளவு முன்னெச்ச ரிக்கை அறிவிப்பை ஒடிசா அரசு வெளி யிடாததால் அம்மாநில மக்கள் கடும் சிர மத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.