states

img

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: 58 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்கு பதிவு

உத்தரபிரதேச சட்ட மன்ற தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இந்தியாவின் மிகப்பெரிய உத்தரபிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 
இன்று 58 தொகுதிகளுக்கு நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  சுமார் 2.27 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். 
மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 10,766 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டடுள்ளது.  இதில், அதிகபட்சமாக ஷாம்லி தொகுதியில் 22.83% வாக்குகளும், ஹாபூா் தொகுதியில் 22.80% வாக்குகளும் பதிவாகியுள்ளன.