உத்தரப்பிரதேச பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷனின் மகனும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைசர்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளருமான கரண் பூஷன் சிங்கின் கார் மோதி 17 வயது சிறுவன் ரெஹன் மற்றும் அவரது சகோதரர் 24 வயதான செஷாத் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.