states

img

ஐஐடி எச்சலாவில் மாணவி தற்கொலை

ஆந்திரா ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம் மன்னியம் மாவட்டம், சாலூரு பட்டணத்தை சேர்ந்தவர் அரிநாத் ஆச்சாரி. இவரது மகள் ரோஷினி (வயது 17). இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் எச்சர்லா பகுதியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  வந்தார்.

தற்போது ஐ.ஐ.டி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரிக்கு சென்ற ரோஷினி தேர்வு எழுதிவிட்டு, தேர்வு நேரம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே விடுதிக்கு திரும்பினார்.  விடுதியில் மாணவிகள் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பின்னர் தேர்வு முடித்து வந்த சக மாணவிகள் ரோஷினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எச்சர்லா  காவல்துறையினர் ரோஷினி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரோஷினி தங்கி இருந்த அறையில் அவர் பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இருந்ததாக தகவல்கள் வெளியானது . ஆனால் ஐஐடி இயக்குநர் தற்கொலை கடிதம் எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே நேற்று ஐஐடி ஐதராபாத்தில் மெஹ் கபூர் என்ற பிடெக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஐஐடி கான்பூரில் பிராசாந்த் சிங் என்ற ஆய்வு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று ரோஷ்னி ஐஐடி எச்சர்லாவில் தற்கொலை  செய்து கொண்ட நிலையில் இந்த வாரத்தில் நடந்த 3வது தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.