states

img

டெல்லி சலோ: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை தாக்குதல் 

மோடி அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அரியானா எல்லையில் டெல்லி சலோ பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். 
ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் நவீன தாராளமய  கொள்கைகள் முன் மிகவும் இழிவான முறையில் சரணடைந்துள்ளது. இதன் காரணமாக , சாமானிய மக்களின் வாழ்க்கைபெறும் சவாலாக மாறி உள்ளது.  வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஒருசில கார்ப்பரேட்களின் கைகளில் செல்வங்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது சாமானிய மக்களின் வாழ்க்கையைப்  கடுமையாக பாதித்துள்ளது. மேலும் மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
நவம்பர் 26 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் ,  அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் 26,27ல் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. 
மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  (நவம்பர் 26) தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக 'டெல்லி சலோ' பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
பா.ஜ.க. ஆளும் அரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான  அரசு பஞ்சாப் எல்லை பகுதியை ஒட்டிய அனைத்து நுழைவு பகுதிகளையும் மூடியது.  144 தடை உத்தரவும் பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் திரண்டு வந்த விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுப்பை மீறி தொடர்ந்து செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.  மேலும் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதையடுத்து காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 
காவல்துறையினரின் இந்த நடடிவக்கைக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 

;