science

img

கை கழுவுதலை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதீர்கள்! தி லான்செட்,நேச்சர் சர்வதேச அறிவியல் இதழ்கள் எச்சரிக்கை

ஹாங்காங்,ஏப்.7- கொரோனா வைரஸ் முகக் கவசங்கள், ரூபாய் நோட்டுகள், பாத்திரங்கள், பேப்பர்களில் சில மணி நேரங்களில் தொடங்கி ஏழுநாட்கள் வரை உயிர்வாழும் என ஹாங்காங்  பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தி லான்செட், நேச்சுர் ஆகிய மருத்துவ வார இதழ்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் கொரோனா பரவலில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக கைகழுவுதலை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது என எச்சரித்துள்ளன. 1823-ஆம் ஆண்டு லண்டனில் தாமஸ்வாக்கி என்பவரால் தொடங்கப்பட்டது தி லான்செட் (The Lancet). மருத்துவ வார இதழாக தொடர்ந்து இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. தி லான்செட் ஆசிரியர் குழு அலுவலகங்கள் லண்டன், நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் செயல்பட்டுவருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து தி லான்செட் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது.  முழுமையான விவரங்களை www.lancet.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் வுஹான் மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அங்கு விரிவான ஆய்வை  ஹாங்காங் பல்கலைக்கழகம்  நடத்தியுள்ளது. அதன் விவரங்களை தி லான்செட் வெளியிட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழக பேராசிரி யர்கள் லியோ பூன் லிட்மேன், மாலிக் பீரிஸ் ஆகிய இருவரும் கொரோனா எந்ததெந்த வகையில் பரவும் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளனர்.  "முகக் கவசங்களில் ஏழு நாட்கள்,  ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும்.

அச்சடித்த காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவும், மரப்பலகை, மற்றும் துணிகளில் இரண்டு நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளது" அதே சமயத்தில் "வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தும் கிருமி நாசினிகள், பிளீச் அல்லது சோப் உபயோகித்து கொரோனா வைரஸை கொன்று விடலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். முகக் கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது முக்கியம் என  பேராசிரியர் மாலிக் பீரிஸ் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில், "கண்களை கைகளால் அடிக்கடி தொடக்கூடாது. ஏனென்றால் கைகள் மாசுபட்டிருக்கலாம் அதன் மூலம் வைரஸ் எளிதில் பரவிவிடும்' என எச்சரிக்கிறது தெற்கு சீனாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் "மார்னிங் போஸ்ட்" நாளிதழ்.

1869-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தி லிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மருத்துவ வார இதழான நேச்சர் இதழில் கடந்தமாதம் கொரோனா குறித்து ஆய்வு செய்துள்ள அமெரிக்க சுற்றுச்சூழலியாளர்கள், "பிளாஸ்டிக் மற்றும் எஃகு ஆகியவற்றில் 72 மணி நேரம் வரை வைரஸ் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர், தாமிரத்தில் நான்கு மணி நேரத்திற்கு அதிகமாக, அட்டைப் பெட்டியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வைரஸ் நீடிக்கவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு வாங்கிவரும் போது  முன்னெச்சரிக்கை தேவை என எச்சரித்துள்ள ஹாங்காங் பல்கலைக்கழகம், வைரஸ் பரவுவதைத் தவிர்க்க  கை கழுவுதல் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.

;