science

img

விமானங்கள் மீது பறவைகள் மோதுவது அதிகரிப்பால் பயணிகளுக்கு ஆபத்து

சென்னை, செப்.18- நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் விமானங்கள் தரை யிறங்கும்போது புறப்படும் போதும் அதன் மீது பறவை கள் மோதுவதால் பயணி களின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக செய்தி கள் தெரிவிக்கின்றன. இப்படி பறவைகள் மோதுகிறது என்று வெறும் செய்திகளை தருவதற்கு பதில் அதை தடுக்க உரிய  ஏற்பாடுகளை விமான நிலைய நிர்வாகம் மேற் கொள்ளவேண்டும் என்று பயணிகளும் விமானிகளும் எதிர்பார்க்கிறார்கள். விமான  நிலையம் அருகே பறவை கள் தங்கும் இடத்தை கண்ட றிந்து அவற்றை அங்கிருந்து அகற்ற  விமான நிலைய அதிகாரிகள் தொடர் கண்  காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் இந்த  இடர்பாட்டை குறைக்க முடியும்.

கடந்த ஒரு மாதத்தில் நாடு முழுவதும் 5 இடங்களில் பறவைகள் மோதியதால் விமானங்களின் என்ஜீன்கள் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்டிகோ,  ஏர்இந்தியா, ஏர் ஏசியா, கலிட்டா ஏர் உள்ளிட்ட  விமான நிறுவனங்களின் விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. இது குறித்த தகவல்கள் ஊடங்க ளில் வருகின்றனவே தவிர பறவைகள் விமானத்தின் மீது மோதுவதை தவிர்க்க  நடவடிக்ககை எடுக்கப்பட்ட தாக தகவல் இல்லை. இது குறித்து விமான நிலைய நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்  றும் எதிர்க்கட்சித் தலைவர்  கள் பயணம் செய்த கோ ஏர்  விமானம் தில்லி இந்திரா  காந்தி விமான நிலையத்தில்  தரையிறங்கும்போது விமா னத்தின் ஒரு என்ஜீனில் பறவை மோதியதை விமானி  உரியநேரத்தில் கண்டு பிடித்தார். பின்னர் வானத்  தில் வட்டமடித்த பின்னர்  பத்திரமாக அந்த விமா னத்தை தரையிறக்கினார். எனவே  விமானத்தின் மீது பறவைகள் மோதுவதை தடுக்க சிவில்விமான ஆணையம் வகுத்துள்ள வழி காட்டுதல்களை கண்டிப்பு டன் அமல்படுத்த கண்கா ணிப்பு தேவைப்படுகிறது.

;