science

img

505 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஜெல்லிமீன் புதைபடிமம் கண்டெடுப்பு

கனடாவில் 505 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்ட ஜெல்லிமீன் புதைபடிமத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
கனடாவின் பர்கெஸ் ஷேல் புதை படிம தளத்தில் ஒரு பாறைக்குள் கண்டெடுக்கப்பட்ட 182 புதைபடிமங்களில் 505 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஜெல்லிமீன் புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த ஜெல்லிமீன் புதைபடிமம் 505 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்த ஜெல்லிமீன் சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
ஜெல்லிமீன்கள் 95 சதவிகிதம் நீரினால் ஆன, விரைவில் சிதையக்கூடிய உடலமைப்பைக் கொண்டதினால், இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறப்புமிக்க கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.