ஸ்டாக்ஹோம், அக். 9- அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்., 2 முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் ஹா ர்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரான கிளாடியா கோல்டினுக்கு பொருளா தார பிரிவுக்கான நோபல் பரிசு திங்க ளன்று அறிவிக்கப்பட்டது. “பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தை யில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற் கொண்டுள்ள கிளாடியா கோல்டினின் ஆராய்ச்சியால் 200 ஆண்டுகளாக தொழிலா ளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு எப்படி மாறியுள்ளன என்பதையும் வரு வாய் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங் களில் பாலின வேறுபாடுகள் எப்படி உள் ளன என்பது பற்றிய தரவுகள் பெறப் ப்பட்டுள்ளன” என நோபல் பரிசு வழங்கும் ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி’ தெரிவித்துள்ளது.