கொரோனா கால மன அழுத்தமும் இளம்பருவ மூளை இணைப்புகளும்
வளரிளம் பருவத்தினரின் மூளையில் அறி வாற்றல் வளர்ச்சி அடைவது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியலாளர் கதீரினா ஸ்டாம்வ்லிஸ் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவில் 21 இடங்களில் ஒருங்கிணைத்து செய்யப்படும் இந்த ஆய்வு ஏபிசிடி (Adolescent Brain Cognitive Develo pment) என்று அழைக்கப்படுகிறது. 2015இலிருந்து நடத்தும் இந்த ஆய்வு, கொரோனா காலத்தில் இளம் வயதினர் சிலர் அதிக மன அழுத்தத்திற்கும் மற்ற வர்கள் குறைவான மன அழுத்தத்திற்கும் ஆளானது குறித்தும் ஆராய்ந்தது. ஏபிசிடி சோதனையில் இணைந்து கொண்ட 11000 இளம்பருவத்தினரில் 1414 நபர்களின் மூளை யின் இரத்த ஓட்டம் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அள விடப்பட்டது. இது மூளையிலுள்ள செல்களின் செயல்பாட்டிற்கு ஒரு அளவீடாகும். மூளையின் சில பகுதிகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படு வதையும் இது பதிவு செய்கிறது. இந்த இணைப்புகளை மூளையின் சர்கியூட்டு கள் என்கிறார்கள். பலவீனமான இணைப்புகளைக் கொண்டிருந்தவர்கள் வலுவான இணைப்புகளை கொண்டிருந்தவர்களை விட பெரும் தொற்று காலத்தில் மன அழுத்தம், சோகமான மனநிலை ஆகியவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இளம்பருவத்தில் துரிதமாக மாறுதலுக்கு உள்ளா கும் ப்ரீ ஃப்ரான்ட்டல் கார்டெக்ஸ் எனும் பகுதியும் உணர்ச்சிகளுக்கு காரணமான அமைகிடலா எனும் பகுதியும் இதில் அடங்கும். இந்த மூளை சுற்றுகளை நீண்ட காலத்திற்கு ஆய்வு செய்ய ஸ்டாம்வுலிஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மூளை வளர்ச்சி அடைய அடைய, அது அனுபவங்களுக்கும் சூழல் களுக்கும் எதிர்வினை ஆற்றுகிறது. அவை நேர்மறை யாக இருந்தால் மூளையின் மின்சுற்றுகள் வளர்ச்சி அடைவதற்கும் எவ்வாறு இணைப்புகளை உரு வாக்கிக் கொள்கிறது என்பதற்கும் மூளையின் பாது காப்பிற்கும் காரணிகளாக இருக்கலாம்.
கரடிகளின் உரோமம் போன்ற குளிர்கால ஆடைகள்
கரடிகளின் உரோமம் கடுமையான குளி ரைத் தாங்கும்வண்ணம் அமைந்துள் ளது. இதை ஒத்த செயற்கை இழைகளை ஏரோஜெல் எனப்படும் பொருளைக் கொண்டு தயாரித்து ஆடைகளை வடிவமைத்துள்ளனர். குளிர்தடுப்பதில் ஏரோஜெல் பொருத்தமான பொருளாகும். அதிலும் உறைக்குள் அடைக்கப்பட்ட ஏரோ ஜெல் மிகச்சிறந்தது மட்டுமல்ல கெட்டித்தன்மை யிலும் உறுதியானது. இந்த இழைகளை வண் ணம் தோய்க்கலாம்; துவைக்கலாம்; நவீன துணிகளிலும் பயன்படுத்தலாம். ஆய்வாளர் கள் இதை ஸ்வட்டர்களில் சோதித்து பார்த்த தில் நல்ல பலன் கிடைத்துள்ளது.
புதிய பாக்டீரியாவிற்கு தாகூரின் பெயர்
சாந்திநிகேதனிலுள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக தாவரவியலாளர்கள் புதிய பாக்டீரியா ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். அதற்கு ‘பான்டோவியா தாகூரேய்’(‘Pantoea Tagorei’) என்று பெயரிட்டுள்ளார்கள். சாந்தி நிகேதனிலுள்ள சோனாஜ்ஹுரி எனும் இடத்தில் இதை கண்டு பிடித்துள்ளார்கள். இந்த பாக்டீரியா நிலத்திலிருந்து பொட்டாசி யத்தைப் பிரித்தெடுக்கும் குணம் உடையது. இதனால் தாவரங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாரியா நிலக்கரி சுரங்கங்களிலும் இது காணப்பட்டுள்ளது. அவை பொட்டாசி யத்தையும் பாஸ்பரத்தையும் கரைய செய்து நைட்ரஜனை நிலை நிறுத்துகின்றன. இதுவும் தாவரங்களின் வளர்ச்சிக்கு துணை செய்கி றது. இந்த பாக்டீரியா, வணிக உரங்களின் பயன்பாட்டை குறைத்து விவசாய செலவுகளை குறைக்கும்; பயிர்களின் உற்பத்தியை அதி கரிக்கும் என்கிறார் ஆய்வின் தலைவரான பாம்பா டேம். இந்திய நுண்ணுயிரி யலாளர்கள் சங்கம்(AMI) இந்தக் கண்டுபிடிப்பை அதிகார்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. தாகூர் விவசாயத்தில் ஆர்வம் உள்ளவராம். அவர் தனது மகன் ரதீன்ரநாத் தாகூரை வேளாண் படிப்பிற்காக அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் அனுப்பினார் என்கிறார் டேம். தாகூரின் வேளாண் விழைவுகளை முன்னிறுத்தி அவரது பெயர் இதற்கு இடப்பட்டுள்ளதாம்.
உயரும் புவி வெப்பம் அண்டார்டிக்கா பனிப்பாறைகள் உருக்குமா?
அண்டார்டிக்கா ஆக்டோபஸின் மரபணுக்களை ஆய்வு செய்ததில், மேற்கு அண்டார்டிக்கா பனிப்பாறைகள்(WAIS) 129000 இலிருந்து 116000 ஆண்டுகளுக்கு முன் சிதைந்தன என்று தெரிய வந்துள்ளது. அப்போதிருந்த வெப்பம், தொழிற்புரட்சிக்கு முந்தய கால வெப்பத்தை விட 1 டிகிரி மட்டுமே அதிகம் இருந்ததாம். எனவே இப்போது புவி வெப்பம் குறைந்த அளவு அதிகமானால் கூட பனிப்பாறைகள் சிதையலாம். அதனால் புவியின் கடல் மட்டம் 3 இலிருந்து 5 மீட்டர் வரை உயரலாம்.