ஸ்டாக்ஹாம், அக்., 04- நடப்பு 2023ஆம் ஆண்டிற் கான நோபல் பரிசு திங்க ளன்று முதல் அறிவிக்கப் பட்டு வருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா வைச் சேர்ந்த 2 பேருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில், நானோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான “குவான்டம் டாட்ஸ்” துறை யில் ஆராய்ச்சிகள் மேற் கொண்டு புதிய கண்டு பிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறை யிலும் மருத்துவ துறை யிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக் காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மவுங்கி ஜி. பவேண்டி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த லூயிஸ் ஈ. ப்ரூஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவரும் வேதியியல் துறையில் 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.