science

img

கொசுக்களை விரட்டும் மூலிகை மெழுகுவர்த்தியை உருவாக்கிய விஞ்ஞானிகள்

கொசுக்களை விரட்டும் மூலிகை மெழுகுவர்த்தி ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

 நாடு முழுவதும் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சலால், இதுவரை 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 82 பேர் பலியாகி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை புள்ளி விவரத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பில் இருந்து தங்கலை பாதுகாத்துக் கொள்ள, மக்கள் சுருள் வத்திகள், கொசு விரட்டி இயந்திரம் உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சுருள் வத்தியில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கொசு விரட்டி இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் - என்.இ.ஐ.எஸ்.டி (CSIR-NEIST) ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள், கொசுக்களை விரட்டும் தன்மை கொண்ட மூலிகை மெழுகுவர்த்தி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த மூலிகை மெழுகுவர்த்தி, கொசுக்களை விரட்டக்கூடிய மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியேறும் நறுமணம், கொடிக்காலை விரட்டும். அதே சமயம், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 

;